இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் https://ift.tt/I7UxasA

படம்
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர், தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்து காத்திருந்தார். பின்னர், சுவாமி சீர்வரிசைபொருட்களுடன் திருக்குளத்துக்குச் சென்று, அம்மனுக்கு கொடுத்து அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, மலைக்கோட்டை உள்வீதியில் சுவாமி, அம்மன் வீதியுலா வந்தனர். பின்னர், கோயிலில் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் சிறப்பாக கூடி வரும். வழக்கில் வெற்றி கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை. ரிஷபம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோடை விடுமுறை | பழநி தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க குவிந்த வெளிமாநில பக்தர்கள் https://ift.tt/pwH9t8G

படம்
பழநி: கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் இன்று (ஏப்.30) வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இன்று அதிகாலை முதலே கேரளா, ஆந்திரா உட்பட வெளி மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோயிலுக்கு ரோப் கார், வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நாளை சித்திரை பெருவிழா தேரோட்டம் https://ift.tt/1bI2lAK

படம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை (மே 1) காலை நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு இந்த விழா ஏப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நான்கு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மே 1) காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
30-04-2023 சோபகிருது 17 சித்திரை ஞாயிற்றுக்கிழமை திதி: தசமி இரவு 8.29 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: மகம் பிற்பகல் 3.30 வரை. பிறகு பூரம். நாமயோகம்: விருத்தி காலை 11.23 வரை. பிறகு துருவம். நாமகரணம்: தைதுலம் காலை 7.36வரை. பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11. யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.30 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.23 from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர்: மே 4-ல் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் https://ift.tt/wtas7GH

படம்
கும்பகோணம் : தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக விளங்குவதாகும். ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 4-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதை யொட்டி தேருக்கான பராமரிப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

களிமேட்டில் இந்த ஆண்டு அப்பர் குருபூஜை சப்பர வீதியுலா நடத்த வேண்டும்: சூரியனார்கோயில் ஆதினம் வலியுறுத்தல் https://ift.tt/NYIm9zh

படம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் வட்டம், களிமேட்டில் அப்பர் குரு பூஜை சப்பர வீதியுலாவை நிகழாண்டு நடத்த வேண்டும் என சூரியனார்கோயில் ஆதினம் வலியுறுத்தியுள்ளார். சூரியனார்கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனத்தில் உலக நன்மைக்காக அங்குள்ள குரு முதல்வருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “சீர்காழி சட்டை நாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி உற்சவர் சிலைகள், செப்பேடுகள் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடியவையாகும். இவை கிடைத்திருப்பது ஆன்மிகத்திற்கு வலு சேர்ப்பதாகும். இந்தச் சிலைகளை சுத்தம் செய்து, ஆகம விதிப்படி பூஜை செய்து, வீதியுலா புறப்பாடு செய்ய வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உங்களின் உழைப்புக்கேற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக் கூடும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கலைப்பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சித்திரைப் பெருவிழா: சுவாமிமலை கோயிலில் கொடியேற்றம் https://ift.tt/rc5sWBd

படம்
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழாயொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு முன் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் https://ift.tt/ciWesRt

படம்
மாமல்லபுரம்: செங்கை மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில்,இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் 3-ம் நாளான நேற்று அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்களின் உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாளுடன் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும்63 நாயன்மார்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைவாக நிறைவடையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சித்திரைப் பெருவிழா 2-ம் நாள்: கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி சுவாமிகள் தரிசனம் https://ift.tt/8MvZyos

படம்
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி 2-ம் நாளான இன்று சாரங்கபாணி மற்றும் சக்கரபாணி சுவாமிகள், விஜீயேந்திரர் மடத்திற்கு எழுந்தருளினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பின்போது, திருக்கோயில்களையும், அதன் சிலைகளையும் சேதப்படுத்த முற்பட்டபோது, விஜீயேந்திர தீர்த்த சுவாமிகள், சாரங்கபாணி மற்றும் சக்கரராஜா ஆகிய 2 உற்சவர் சிலைகளைப் பாதுகாத்து, தனது மூலராமர் சிலையுடன் 3 கால பூஜைகள் செய்து வழிபட்டு, மீண்டும் இக்கோயில்களுக்குக் கிடைப்பதற்கு வழிவகை செய்தார். அதன் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவான 2-ம் நாளில் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: தேரோட்டத்துக்கு தயார் நிலையில் தேர்கள் https://ift.tt/JOjhZxb

படம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 3-ல் நடைபெறும் தேரோட்டத்துக்காக தேர்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் ஏப்.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம் நாள் திருவிழாவாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30ல் நடைபெறும். அடுத்த நாள் மே 1-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மே 2-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். மே 3-ல் தேரோட்டம் நடைபெறவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவை - அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம் https://ift.tt/1sOwLCP

படம்
கோவை: கோவை - அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவுகளால் மனக்கசப்புகள் வரக்கூடும். பயணங் களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். தோல்வி பயம் நீங்கும். சகோதரர்கள் உதவுவார்கள். பழைய கடன்களை ஒவ்வொன்றாக பைசல் செய்வீர் கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஏப்.27 - மே 3

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.27 - மே 3

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.27 - மே 3

படம்
கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.27 - மே 3

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் (வ), ராகு, சூர்யன், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது. கிரகமாற்றம்: 03-05-2023 அன்று சுக்ர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் https://ift.tt/7CXPaow

படம்
பழநி: பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு உட்பட்ட லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.26) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மரியாதை கூடும். ரிஷபம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். வாகனச் செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். கலை பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் காஞ்சி சங்கர மடத்தின் கிளைகளில் ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா https://ift.tt/m9ZrHa1

படம்
அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரின் 2,532-வது ஜெயந்தி விழா நேற்று இந்தியா முழுவதும் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளைகளில் கொண்டாடப்பட்டது. திருப்பதியில் முகாமிட்டுள்ள காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். 8 வயதில் வேதம், 12 வயதில் சாஸ்திரம், 16 வயதில் பாஷ்யம் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். அத்வைத தத்துவத்தை நிலைநாட்ட மடங்களைத் தோற்றுவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோப்பறைகள் விற்பனை மும்முரம் https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981104.jpg

படம்
மதுரை: மதுரையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் சுவாமி மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோப் பறைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து சுவாமி மீதும், மக்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தேர் திருவிழா https://ift.tt/fEFSNns

படம்
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேச பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜரின் 1006-வது அவதரார திருவிழாவையொட்டி 9-ம் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்பழமை வாய்ந்த ஆதிகேசவபெருமாள் மற்றம் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடம்தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மற்றும் ராமானுஜர் அவதார திருவிழா நடைபெறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
25-04-2023 சோபகிருது 12 சித்திரை செவ்வாய்க்கிழமை திதி: பஞ்சமி காலை 9.46வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 4.26 வரை. பிறகு புனர்பூசம். நாமயோகம்: அதிகண்டம் காலை 7.49 வரை. பிறகு சுகர்மம். நாமகரணம்: பாலவம் காலை 9.46 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: மந்தயோகம் பின்னிரவு 4.26 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51. அஸ்தமனம்: மாலை 6.22 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2,7,9 சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ் வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர். மனக் குழப்பங்கள் நீங்கும். ரிஷபம்: ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகையுண்டு. கலை பொருட்கள் சேரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: உங்கள் இயல்பான, இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் தெரியும். பயணங்கள் சிறப்பாக அமையும். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு https://ift.tt/NqJAFS5

படம்
மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ரூ.87 லட்சத்தில் புதிய தேர் திருப்பணி தொடக்கம் https://ift.tt/UN9nImh

படம்
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்தில் புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோயிலான ஞானாம்பிகையம்மன் சமேத தேனுபுரீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.87 லட்சம் மதிப்பில் புதிய மரத்தேர் வடிவமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள் உற்சவமாக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், அந்த உற்சவத்தின் போது தேர் இல்லாததால் கட்டுத்தேரைக் கொண்டு விழாக்களை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, புதிய தேர் வடிவமைக்கப் பக்தர்கள் வலியுறுத்தியதின் பேரில், கோயில் நிர்வாகம் ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கி, புதிய தேர் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேர் வடிவமைப்பதற்கான திருப்பணி தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை https://ift.tt/UxScd04

படம்
சென்னை: அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் 12 பெருமாள் கருட சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆலங்குடியில் குரு பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் https://ift.tt/u9Av1fI

படம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நேற்றிரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குரு பகவான் நேற்றிரவு 11.27 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் நேற்றிரவு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை https://ift.tt/erDPwjS

படம்
சென்னை: சென்னையில் ரம்ஜான் பண்டிகைகோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையின்போது இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் கருதப்படுகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பதுகடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவர். இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு, கடந்தமார்ச் 24-ம் தேதி தொடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் முதல் மீனம் வரை | குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 24 முழுமையாக

படம்
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை (22.04.2023) சுக்ல பட்சத்து துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், கௌலவம் நாமகரணம், ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், மேஷ லக்னத்தில், சந்திரன் ஓரையில், குரு பகவான் மீனத்திலிருந்து மேஷம் ராசிக்குள் அதிகாலை 5 மணி 14 நிமிடத்துக்கு பெயர்ச்சியாகிறார். காலப்புருஷ தத்துவப்படி குருபகவான் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைவதால் சொத்து மதிப்பு உயரும். மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை உள்ள காலகட்டங்களில் குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண இழப்பு, ஏமாற்றம், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா - ஏராளமான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி வழிபாடு https://ift.tt/QUJdKV0

படம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆதிபுஷ்கரணி விழா இன்று தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். நவகிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குரு பகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு, அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும். மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் சனிக்கிழமையான இன்று பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, மேஷ ராசிக்குரிய நதியான, புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா தொடங்கியது. சங்கராபரணி ஆறு வடக்கு நோக்கி பாய்வதாலும் கங்கைக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி 2023 - 24 | கடகம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: ஈர மனசும் இயல்பான பேச்சும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்திருந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்த குருபகவான் இப்போது ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் எதிலும் இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருவின் பார்வையால் பல நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பேசியே பல பெரிய காரியங்களை முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் வரும். பழைய சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பார்வை கோளாறு நீங்கும். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை குரு பார்ப்பதால் தாய்மாமன் வகையிலிருந்த மனக்கசப்புகள் தீரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். சிலருக்கு வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். 6ம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். வெள

குரு பெயர்ச்சி 2023 - 24 | ரிஷபம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

படம்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) பலன்கள்: இதயம் அழுதுக் கொண்டிருந்தாலும், உதட்டில் புன்னகையை உதிர்ப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்களின் விரய வீடான 12 ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகி முடியும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். குரு பகவான் உங்கள் 4 ம் வீட்டை பார்ப்பதால் தாயாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும். வீடு வாங்கும் திட்டம் இப்போது நிறைவேறும். உங்களிடம் இருந்த கூடாப்பழக்கங்கள் குறையும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinem

குரு பெயர்ச்சி 2023 - 24 | மேஷம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள்: பரந்த மனதும், பிரதிபலன் பாராமல் உதவும் பண்பும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு வீண்பழி, விரயச் செலவு, மன உளைச்சல் என உங்கள் நிம்மதியை கெடுத்த குருபகவான் இப்பொழுது ஏப். 22, 2023 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து மே 01, 2024 வரை ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நிலை பாதிக்கும். தலைச்சுற்றல், ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைவு என வரக்கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவு, பிரிவு வரக்கூடும். குருவின் பார்வையால் கெடுபலன்கள் குறையும். குருபகவான் உங்களின் 5 ம் வீட்டை தனது அருட்பார்வையால் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக அமையும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily

அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ல் 12 கருட சேவை உற்சவம் https://ift.tt/fjRC5Js

படம்
கும்பகோணம் : அட்சய திருதியையொட்டி கும்பகோணத்தில் ஏப்.23-ம் தேதி 12 கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். நிகழாண்டு, ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
21-04-2023 சோபகிருது 8 சித்திரை வெள்ளிக்கிழமை திதி: பிரதமை காலை 8.32 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: பரணி இரவு 11.02 வரை. பிறகு கார்த்திகை. நாமயோகம்: ப்ரீதி காலை 11.02 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: பவம் காலை 8.32 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00. யோகம்: சித்தயோகம் சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.22 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,7 சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவண்ணாமலை கோயிலில் ரூ.2.07 கோடி உண்டியல் காணிக்கை https://ift.tt/XFdhua0

படம்
திருவண்ணாமலை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், துர்க்கை அம்மன் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. அவ்வாறு, பங்குனி மாத பவுர்ணமியையொட்டி பெறப்பட்ட காணிக்கையை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் குமரேசன் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரொக்கம், 195 கிராம் தங்கம், 1,205 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 |  மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு எப்படி?

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு எப்படி?

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ராசியில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி?

படம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுகஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ரண ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | புஷ்கரணியில் நீராடும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் - 200 போலீஸார் பாதுகாப்பு https://ift.tt/BGzOcYr

படம்
புதுச்சேரி: புஷ்கரணி வரும் பக்தர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தால் பந்தல் வசதி, நீராடும் பக்தர்கள் ஆடை மாற்ற ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகளும், 50 மொபைல் டாய்லெட்டுகளும் அமைக்கப்படும். 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் வல்லவன் கூறினார். நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, அந்தந்த ராசிக்குரிய ஆறுகளில் புஷ்கரணி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். புஷ்கரணி என்பதற்கு ஆறுகளில் புனித நீராடுதல் என்பது பொருளாகும். புஷ்கரணி விழாவின்போது, சம்பந்தப்பட்ட ஆறுகளில் மக்கள் புனித நீராடுவது வழக்கம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 | மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு எப்படி?

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பெயர்ச்சி - 22-04-2023 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். பார்வை: குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குரு பெயர்ச்சி 2023 - 2024 | குரு பார்வையின் பலன்களும் பாக்கியமும் - ஒரு விளக்கம் 

படம்
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்: நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். ரிஷபம்: சகோதர வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் பேசும்போது, வார்த்தைகளை சரியாக கையாளவும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவிநாசி ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரை சுமந்து வந்த பக்தர்கள் https://ift.tt/MLZGOhX

படம்
திருப்பூர்: பருவமழை தவறாமல் பெய்யவும், பொதுமக்கள் பிணியின்றி வாழவும் ஆண்டுதோறும் அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் ஆகாசராயர் கோயில் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அவிநாசியை அடுத்துள்ள ராயம்பாளையத்தில் இருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டு தோறும் சுமந்து வந்து ஆகாசராயர் கோயிலில் வைப்பது வழக்கம். அதன் பின்னரே தேர்த் திருவிழா தொடங்கும். அதன்படி நேற்று ராயம்பாளையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரையை சுமந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்